நீ முகம் திருப்பி நடந்த போதே
நான் முடிவெடுத்தேன்
மற்ந்து விடுவதென
கைபேசியில் உன் சிணுங்கல்கள்
காதலர் தின வாழ்த்து அட்டைகள்
கடிதத்தில் கவிதைகள்
நீ தெரிந்தெடுத்த சட்டைகள்
சின்ன சின்ன பரிசுகள்
எல்லாம் சுருட்டி கடலில் வீசிவிட்டேன்
திரும்பி நடந்த போது
சிரித்த படி எதிரே
கடலை விற்கும் கடற்கரை பையன்
" அக்கா வரலீங்களா சார் "
சே !... மறுபடி உன் நினைவுகள்...........
Tuesday, September 16, 2008
பீகார் வெள்ள சேத நிவாரணத்திற்கு ஒரு நிமிடத்தை செலவழித்தால்....
பீகார் வெள்ள சேதத்தை பற்றி தெரிந்திருக்கும். வெள்ள சேத நிவாரணத்திற்கு நீங்களும் உதவலாம். உங்களின் பொன்னான ஒரு நிமிடத்தை செலவழித்தால் போதும்.
இந்த தளத்திற்கு செல்லவும். http://www.helpbihar.in
நாலே கேள்விகள். சரியான பதிலுக்கு கொடுத்தால், உங்கள் சார்பாக உதவிகள் செய்யப்படும்.
உங்களுக்கே பதில் தெரியும். இருந்தாலும் இந்தாங்க பிட்.
1. Capital of bihar : Patna
2. The river caused flood : Kosi
3. Total people affected : 25lakhs
4. What is the opposite of word "flood" : Drought
எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா...
இந்த தளத்திற்கு செல்லவும். http://www.helpbihar.in
நாலே கேள்விகள். சரியான பதிலுக்கு கொடுத்தால், உங்கள் சார்பாக உதவிகள் செய்யப்படும்.
உங்களுக்கே பதில் தெரியும். இருந்தாலும் இந்தாங்க பிட்.
1. Capital of bihar : Patna
2. The river caused flood : Kosi
3. Total people affected : 25lakhs
4. What is the opposite of word "flood" : Drought
எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா...
கடவுளின் துகள் - ஹக்கர்களின் அட்டாக்!!!
சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டைல் 18 மைல் சுற்றளவான கடவுளின் துகளை காணும் பரிசோதனைக்காரரின் உத்தியோகபுர்வ இணையத்தளம் 2600 of the Greek Security Team எனும் ஹேக்கர் குழுவால் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. உலகத்தை காப்பாற்றும் பொருட்டு இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்

LHC பரிசோதனைக்கான கணனி வலைப்பின்னல் மிகமிக சிக்கல் வாய்ந்த ஒரு கட்டமைப்பாகும். தகவல்களை மீவேகத்தில் பதிவுசெய்யவும் அதி விரைவான அனலைஸ் வேலைகளுக்குமெக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கணனிகளிக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக இதில் உள்ள கணனி பிரிவு MIT நிபுணர் Frank Taylor தெரிவித்திருக்கிறார்.
CMS ( Content Management System ) ல் செய்யப்பட்ட வெப்சைட்டை ஹேக் பண்ணுவதில் எந்த பிரச்சகையுமில்லை. இது மிக இலகுவானது. இதில ஆச்சரியப்பட ஒன்றுமில்லையேன இதன் கணனி பாதுகாப்பு பிரிவிகர் [the computer security team] கூலாக கூறியிருப்பதுதான் ஆச்சரியம்.
ஆனாலும் ஹேக்கர்கள் பிரதான கட்டளைக்கணணியை அணுகுமுன்பாக தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மிக அரிய விடயங்களும் பணமும் காக்கப்பட்டிருக்கிறது.
ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் !!! ( சொல்லியதும் அவர்கள்தான் )
மேலும் தகவல்களுக்கு
http://blog.wired.com/wiredscience/2008/09/hackers-infiltr.html
சில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனையினால் Black Hole உருவாகலாமென எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் பௌதிகவியலாளர்கள் இதற்கு வாய்ப்பில்லையெக மறுத்திருக்கிறார்கள்.
ஆனால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு பண்ணி எந்த பிரச்சனையும் வராது என அடித்துச்சொல்லி கொஞச நாளிலேயே இப்படி மெயின் கணினியையே ஹேக் செய்யும் அளவில. இருக்குமானால் இவர்களின் உத்தரவாத்ததை இனி யார் நம்பப்போகிறார்கள் ????
உமாவுக்கு.......
எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.
என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.
எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.
எனக்குப் பிடித்த நிறம் ஆரஞ்சு என்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் ஆரஞ்சு என்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.
என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!
அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.
இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!
என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.
நான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.
என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். .
எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. எனக்கு பாவக்காய் பிடிக்கும் என்பதற்காக நம் வீட்டு லிஸ்டில் இப்போது பாவக்காய் வருகிறது ...
எங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.
பீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.
பொரியல் வைக்கும்போது மட்டும் மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.
( அவ்வளவு காரம் )
என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.
ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.
உமா....
ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறவேண்டுமெனக்கு...
அப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்!
என் மனைவியாய் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்
ஜெய்
Subscribe to:
Posts (Atom)

.jpg)