Thursday, February 19, 2009

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் மண்ணில் சாய்கிறது மறந்துவிடாதீர்கள்

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் மண்ணில் சாய்கிறது மறந்துவிடாதீர்கள்
http://www.tpas.ch/
படிவத்தை உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி அனுப்பிவையுங்கள்

நாம் நினைத்தால் நம்மால் முடியும் .........
முயற்சி எடுக்கும் ஒவொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்

ஆந்திராவில் தனித் தெலுங்கானா மாநிலத்தை ஆதரிப்பதாக அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாததால் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி M.L.A க்கள், M.Pக்கள் அனைவரும் பதவியை துறந்தனர். இத்தனைக்கும் அங்கு உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை. கொள்கைக்காகவே அவர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.ஆனால் தமிழகத்தில் இத்தனை பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தும் பதவியை துறக்க ஒருவரும் முன் வரவில்லை.
இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கூட பதவி சுகத்தை விட மனது வரவில்லை. பதவியை இழந்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று வியாக்கியானம் பேசுகிறார்கள். மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை அரசுக்கு செல்லும் உதவி தடைபட்டிருக்கும். தேர்தல் முன் கூட்டியே வந்திருக்கும். அடுத்து வரும் ஆட்சியாளர்களின் பார்வை வேறுவிதமாக இருந்திருக்கும். போரில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கும்.

இந்த ஓட்டு பொறுக்கிகள்தான் எதுவும் செய்யவில்லை. போராடும் மற்றவர்களையாவது விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. போட்டி பேரணி, போட்டி உண்ணாவிரதம், போட்டி மனிதச் சங்கிலி என்று உண்மையான போராட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது, ஊடகங்களை மிரட்டி உண்மைச்செய்திகளை வெளியிடாமல் தடுப்பது என்று எத்தனை நாடகங்கள் நடத்தினார்கள்.

மாணவர் போரட்டத்தை ஒடுக்க காலவரையற்ற விடுமுறை அளித்திருக்கிறார்கள். அப்படியானால் இன்னும் ஒரு சில நாட்களில் புலிகளை ஒழித்துக்கட்டி விடுவார்கள். நாம் கல்லூரிகளை திறந்து விடலாம் என்றுதானே திட்டம் போட்டிருக்கிறார்கள். புலிகள் எப்போது அழிவார்கள் என்று இலவு காத்த கிளி போல மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழினமே நெருக்கடியில் உள்ள போது,
அன்பழகன் அறிக்கை வெளியிடுகிறார். முதல்வர் மருத்துவமனையில் உள்ளார் அவருக்கு சிறு நெருக்கடி கூட தரக்கூடாது என்று.

கால சக்கரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கடந்த 36 வருடங்களில் உலகில் எத்தனையோ மாற்றங்கள் நடந்து விட்டன. மாற்றம் என்ற சொல் கூட மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் நிமிடத்திற்கு ஒரு முறை மாறி மாறி பேசுகிறார்கள். ஆனால் கொண்ட கொள்கையிலும் போராட்டத்திலும் இன்று வரை பிறழாமல் மன உறுதிமிக்க ஒரே தலைவன் பிரபாகரன் தான்.

துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..

இந்திய கருணா

இந்தியாவின் நீரோ மன்னன். துரோகத்தின் மொத்த உருவம். உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம். மனித சங்கிலி, போட்டி குழு, போராட்டம், 'அய்யகோ' தீர்மானம், உயிரை தருவேன், ஆட்சியை இழக்க தயார் என்றெல்லாம் சொல்லி எவ்வளவு நாள் இழுக்க முடியுமோ இழுத்தார். கடைசியில் காங்கிரசையும் தி.மு.க வையும் பிரிக்க சூழ்ச்சி என்றார். ஒற்றுமையாக
இருப்போம் என்று சொல்லியே ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவர். தீக்குளிப்பை அரசியல் செய்யாதீர் என்று சொல்லி சொல்லியே தீக்குளித்தவர்கள் பொண்டாட்டியுடன் சண்டை போட்டுத்தான் செத்தார்கள் என்று தியாகத்தை கொச்சைப்படுத்தியவர். இலங்கை தமிழர் சாவதில் கூட அரசியல் செய்த உலக தமிழின தலைவர் இந்திய 'கருணா' இவர்தான்.

இலங்கை கருணா

துரோகிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடித்தவர். துரோகம் என்ற‌ வார்த்தையின் முழு அர்த்தம். கோடி எட்டப்பன்களுக்கு சமம். மஹிந்தவின் காசுக்காக‌ இனத்தையே காட்டி கொடுத்தான்.

விஜயமில்லா காங்கிரஸ்காந்த்

எதிர்கால கருணாநிதி. தமிழினத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் போது வரப் போகும் காங்கிரஸ் கூட்டணிக்காக மவுனியாக இருந்தார். சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்யும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் ஐ.நா சபையை அணுக வேண்டும் என்றார். ஐ.நா சபையை யார் கேட்பது? மத்திய அரசில் உள்ள சோனியாதான் கேட்க வேண்டும்?
ஆட்சிக்கு வராத பொழுதே இவ்வளவு நாடகம் என்றால் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? மக்கள் இவரை பெரிதும் நம்பி ஏமாந்தார்கள்.

ஜால்ரா லலிதா

இராஜபக்சேவின் ஜால்ரா தங்கை. தன்னுடைய பாதுகாப்புக்காக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் பல முறை ஏறிய இந்த‌ லலிதாமணி, போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார். குழந்தைச் செல்வங்களை பெற்றிருந்தால் அதன் அருமை தெரிந்திருக்கும்.

காங்கிரஸ்காரர்கள்

இராஜிவ் காந்தியுடன் பூந்தமல்லிவரை வந்து விட்டு பெரும்புதூரில் சிறுநீர் வருகிறது, கழிவறைக்கு செல்கிறேன் என்று சாக்குப் போக்கு சொல்லி விட்டு ஓடியவர்கள்.

தினமலர்

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற துரோகிகளின் பேட்டியை மூன்று பக்கத்திற்கும், புலிகளின் அழிவுச் செய்தியை மட்டும் முதல் பக்கத்தில் வெளியிடுவார்கள். நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவதை ஒரு நாளும் வெளியிடமாட்டார்கள். பார்ப்பன வெறி பிடித்த தமிழின விரோத பத்திரிக்கை.

மருத்துவர் ஐயா

பிள்ளையையும் கிள்ளுவார், தொட்டிலையும் ஆட்டுவார். பிரணாப்புடன் சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை என்பார் மறு நிமிடம் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என்பார். ஒரு பக்கம் மக்கள் தொலைக்காட்சியில் ஈழ புராணம் மறு புறம் மத்திய அரசில் பதவி.

புரட்சிப் புயல்

தப்பான இடத்தில் சரியான டைமில் இருப்பார். புலிகளின் குரல் என்று சொன்னார்கள். ஆனால் போயஸ் கார்டன் முந்தானையிலிருந்தல்லவா குரல் ஒலிக்கிறது.

ஈழ மக்களை கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தமிழக மக்களை இந்த துரோகிகளிடமிருந்து அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

எதிர்வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் நமது மக்கள்தான் இந்து ஜாதி, இனம், கட்சி, தலைவன், தொண்டன் என்று பிரிந்து கிடக்கிறார்களே... 'டெத் ஸ்கோர்' உயர்ந்து கொண்டிருக்கும் போது 'கிரிக்கெட் ஸ்கோர்' கேட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் எங்கே தண்டனை வழங்கப் போகிறார்கள்.

இவர்களின் கூத்துகளை சொர்க்கத்தில் இருந்து மாவீரர்களான‌ கரும்புலிகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஓட்டுப் பொறுக்கி நாய்கள் நரகத்திற்கு செல்லும் போது அங்கு வந்து கரும்புலித்தாக்குதல் நடத்துவார்கள்.

Tuesday, February 3, 2009

தமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ!

இலங்கைத்தமிழர் விடயத்தில் தற்போதய ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யப்போவதில்லை. தமது சொந்த பகைக்காக நடத்தும் யாகத்தில் ஒரு இனத்தையே போட்டு எரிக்கின்றனர்.
எவ்வளவு கண்ணீர் விட்டாலும், தீக்குளித்தாலும், உண்ணாவிரதம் இருந்தாலும், காந்திய வழியில் அறப்போராட்டம் செய்தாலும் - காந்தியின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்பவர்கள் காது கொடுத்து கேட்கப்போவது இல்லை.

எனவே இந்தியா உட்பட (காங்கிரஸ் அரசாங்கம்) அனைவரின் தலையிலும் குட்டக்கூடிய ஒரு பராக்கிரமசாலிதான் இலங்கைத்தமிழருக்கு இப்போது வேண்டும்.
அந்த பராக்கிரமசாலி அமெரிக்கா!

உங்கள் போராட்டங்கள் மெல்ல உத்வேகம் பெறும் இவ்வேளை நேரத்தை கடத்தாமல் பராக்கிரமசாலியை பலவழிகளில் அணுகுங்கள்.

இதோ ஒரு வழி…

அமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம்.

உதாரணத்திற்கு:

” Please stop the Genocide of TAMILS in Sri Lanka “
” Please help to Srilankan Tamils”
“Please help to Srilankan Tamils Freedom”

இவ்வாறு இன்னும் பல நீங்களாகவே எழுதி அனுப்புங்கள். (யாராவது நல்ல நல்ல வசனங்களை எழுத இங்கு உதவுங்கள்)
நாம் கோரிக்கையை வைக்கும் உலகில் அதி உயர் அதிகாரம் உள்ள இடம் இது என்பதை மறந்துவிட்டதீர்கள்.

சரி வாருங்கள் இங்கு கிளிக் பண்ணி - வெள்ளைமாளிகைக்கு

http://www.whitehouse.gov/contact/

Monday, February 2, 2009

ஈழம் நேற்றும் இன்றும் தலைப்பு(title song) பாடல்

ஈழம் நேற்றும் இன்றும் எனும்


மக்கள் தொலைகாட்சி தொடரில்

தலைப்பு(title song) பாடல் –எழுதியவர்

திரு.பச்சியப்பன்





தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே





வெடி விழுந்து எரிந்த பனை

கரை உடைந்து காய்ந்த குளம்

கூரை சரிந்த எமது இல்லம்

குருதி படிந்த சிறு முற்றம்





இரவை கிழித்த பெண்ணின் கதறல்

ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை

தேசம் பதுங்கு குழியின் உள்ளே

புதைய………………சம்மதமோ…………..





தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே





விளக்கேற்றிய மாடமெல்லாம்

வீழ்ந்து போனதோ…………..





ஊஞ்சலாடிய கம்பு இல்லை

நீந்தி பழகிய ஆறு இல்லை





என் தோப்பினுள் அலைந்த

பூங்குருவிகள் எங்கு போனதோ

என் தோட்டத்தில் ஈன்ற

தாய்பூனை என்ன ஆனதோ





முற்றம் தெளித்திட

விடியல் வருமோ

அர்த்த சாமத்தில்

வாழ்வு முடியுமோ


                                இந்த பாடல் ஒலி வடிவில் கிடைத்தால் .... கொடுத்து உதவுங்கள் ....